சூஃபி இப்ராஹிம் ஹள்ரத்
நாஜிர், ஹமீதிய்யா அரபி பாடசாலை, கோபாலபட்டிணம்
"
قلب المؤمن عرش الله"
முஃமினுடைய கல்பு
அல்லாஹ்வின் அர்ஷாகும் என்ற நபிமொழியின் கருத்தை அறிய வேண்டுமாயின் கல்பு,
அல்லாஹ், அர்ஷ் ஆகிய இம்மூன்றைப் பற்றியும் சிறிதளவேனும் விளங்கிக் கொள்வது
அவசியமாகும். அப்போது தான் இம்மூன்றுக்கிடையிலான தொடர்பு எத்தகையது ...? என்பதை புரிந்து
கொள்ள முடியும்.