Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Tuesday, 29 December 2015

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்


ந்தியா எனப்படும் பாரதத்தில் மக்களாட்சி சிறப்புடன் நடைபெறுவதற்காக உரிமையியல் சட்டங்களும் குற்றவியல் சட்டங்களும் செயல் முறையில் இருப்பதோடு இந்திய அரசியலமைப்புச் சட்டம் (Constitution Of Indian)  என்ற சட்டமும் இருப்பதை நாம் அறிவோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 26-11-1949.ம் ஆண்டு அரசியல் நிரணய சபையால் உருவாக்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறை காரணமாக பாரத நாட்டில் பலர் விடுதலை வேட்கையின் அறப்போராட்டத்தில் பலியாகி இருக்கின்றனர்.

அல்குர்ஆன் ஓர் அற்புதம்


அரபியில் "முஃஜிஸா" என்றால் "மற்றவர்களை இயலாதவர்களாக்கும் காரியம்." என்று பொருள். அதைத்தான் தமிழில் "அற்புதம்" என்று கூறுகிறோம். முந்தய நபிமார்கள் செய்த அற்புதத்தை வெல்லுகிற செயலை மற்றவர்களால் செய்ய இயலவில்லை. எனவே தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் எதிரிகள், "நீங்கள் நபி என்றால் முன்னர் இருந்த நபிமார்கள் காட்டிய அற்புத செயல்களை - முஃஜிஸாக்களை நீங்களும் காட்டுங்கள்." என்று இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு அல்லாஹ் பின் வருமாறு பதிலளித்தான்.

Monday, 28 December 2015

இஸ்லாமிய பார்வையில் எல்லாம் இறைமைத்தனம்.


 லைலா மஜ்னூன் கதை உலகத்தின் மிகப் பிரபல்யமான காதல் உவமைக்கு எடுத்துக் கூறப்படும் மிகச் சிறந்த கதையாகும்.  கைஸுல் மஜ்னூன் என்ற அந்த வாலிபரின் காதல் நிலை கட்டுமீறி போன போது அவருடைய தந்தையிடத்தில் பல நண்பர்கள் துஆக்கள் ஏற்கபடும் இடங்களில் முதலிடமாக கஃபா என்னும் இறையில்லமும் கருதப்படுகிறது. அந்த இடத்திற்கு உங்கள் மகனை அழைத்துச் சென்று பிரார்த்திக்க வையுங்கள். இறைவன் நாடினால் லைலாவின் பாசத்திலிருந்து உங்கள் மகன் விடுபடலாம் என்று கூறினார்கள்.

விளையாட்டில் இஸ்லாம்

 
இறைவன் உலகை அறிமுகப்படுத்தும் போது இவ்வாறு கூறுகிறான்.
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهْوٌ ۖ وَلَلدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ
6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

وَمَا هَٰذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ ۚ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
29:64. இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.

Tuesday, 22 December 2015

அகம் அல்லாஹ்வின் அர்ஷ்!

சூஃபி இப்ராஹிம் ஹள்ரத்
              நாஜிர், ஹமீதிய்யா அரபி பாடசாலை, கோபாலபட்டிணம்

                            " قلب المؤمن عرش الله"
முஃமினுடைய கல்பு அல்லாஹ்வின் அர்ஷாகும் என்ற நபிமொழியின் கருத்தை அறிய வேண்டுமாயின் கல்பு, அல்லாஹ், அர்ஷ் ஆகிய இம்மூன்றைப் பற்றியும் சிறிதளவேனும் விளங்கிக் கொள்வது அவசியமாகும். அப்போது தான் இம்மூன்றுக்கிடையிலான தொடர்பு எத்தகையது ...?  என்பதை புரிந்து கொள்ள முடியும்.

Thursday, 10 December 2015

அன்னிய அழகு

மவ்லானா மவ்லவி முஹம்மது இக்பால் காஸிமி,
பேராசிரியர் அல்பாகியாதுஸ்ஸாலிஹாத், வேலூர்.

பார்ப்பவர்களுக்கு தான் அழகாக தோன்ற வேண்டும். மற்றவர்கள் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். விரும்பி பாராட்ட வேண்டும். அழகையும் நல்ல குணங்களையும் போற்ற வேண்டும். என்னதான் கூச்சமும் வெட்கமும் தடுத்தாலும் ஒரு வாலிப பெண்ணிண் உள்ளத்தில் தவழும் இயல்பான ஆசைகள் தான் இவை. தேடி வந்து தன்னை ஏற்றுக் கொள்பவனிடத்தில் தன்னை பரிபூரணமாக அர்பணித்துக் கொள்கிறாள்.

Friday, 4 December 2015

இஸ்லாமும் சமூக நீதியும்

      - பேரறிஞர் மௌலவி V.U.A யூசுப் அன்ஸாரி ஹளரத் அவர்கள்.

ஸ்லாம் இறைமார்க்கம். அறிவொளிரும் மார்க்கம். அனைத்துலக மக்களும் எளிதில் பின்பற்றத் தக்க எளிய மார்க்கம். உலக மக்களுக்காக அல்லாஹ் வழங்கி அதனை பொருந்திக் கொண்ட மார்க்கம், எல்லா காலங்களுக்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்தும் பொது மார்க்கம். அனைத்து மக்களுக்குமிடையே சாந்தி சமாதானம் அன்பு அமைதி போன்ற பொற்குணங்களை உருவாக்கி உயிர் துடிப்புடன் இயங்கி வருகின்ற அருளியல் மார்க்கம்.

Monday, 30 November 2015

சூபியிஸம் இஸ்லாத்தில் இல்லாததா.?


           மௌலவி அல்ஹாஜ் O.M. அப்துல் காதிர் பாகவி.

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ

3:164. நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.

Thursday, 26 November 2015

ஆலிம்கள் ஆன்மீக அரசர்கள்


                                     - மௌலவி T.J.M. ஸலாஹுத்தீன் ரியாஜி.
நெல்லை.

லமாக்கள் ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர்கள். ஆலிம்கள் என்னும் இந்த ஆன்மீகத் தாரகைகளால் தான், சமுதாயம் சங்கை பெறுகிறது. இவர்களது அற்புதமான வழிகாட்டல்கள், மனித சமூகத்தையே நேர்வழியில் நடமாட வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த பண்பாட்டுக் காவலர்களின் பயனுள்ள பேச்சுக்களால் பல தலைமுறைகள் தட்டியெழுப்ப பட்டுள்ளன. இவர்களது அயராத முயற்சிகளினால் தூங்கி கிடந்த பல மனித மனங்கள், தொழுகையின் பக்கம் துள்ளி எழுந்து வந்துள்ளன.

Wednesday, 25 November 2015

மாலை சூடும் மணமகன்

 
ஆக்கம்:
                செய்யிது அப்துல் ஜப்பார் ஹளரத் காதிரி.
    முன்னாள் முதல்வர், அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத். வேலூர்.

மொழியாக்கம்:
மௌலவி ஹயாதுத்தீன் யூசுபி பாஜில் காஷிபி
பேராசிரியர், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி.

ன்று சில ஹளரத்மார்கள், மணமகன் கழுத்தில் மாலை போடுவதை காண விரும்புவதில்லை. பார்த்தால் கோபப்படுகிறார்கள். ஆனால் ஹஜ்ஜிலிருந்து திரும்பும் ஹாஜிகள் மந்திரிகள் மற்றும் தலைவர்களுக்கு தங்களது புனித கரத்தினால் பூ மாலை போட்டு வரவேற்பார்கள். ஆயினும் மணமகன் கழுத்தில் காணுவதை மட்டும் அவர்களால் சகித்து கொள்ள முடிவதில்லை. இது ஏனென்று தெரியவில்லை.

Tuesday, 24 November 2015

முழுமை பெற்ற தீன் பிக்ஹு ஆய்வு சட்டங்களையும் உள்ளடக்கியதே..

முழுமை பெற்ற தீன் குர்ஆன் ஹதீஸ் மட்டுமல்ல.... அதன் பிக்ஹு ஆய்வு சட்டங்களையும் உள்ளடக்கியதே..
-          ஷைகுல் ஹதீஸ் H. கமாலுத்தீன் ஹளரத் அவர்கள்.
(அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத்வேலூர்.)

Saturday, 21 November 2015

சுவனம் செல்ல ஸஹாபாக்களை பின்பற்றுவீர்.



நபிகள் நாயகம் ஸல் அவர்களது சுன்னத் பின்பற்ற தகுந்தது என்றால் ஸஹாபாக்களின் முன் மாதிரியை ஒப்புக்கொள்ளுதலும், அவர்கள் நடந்து காட்டிய வழியில் செல்வதும், நபிகள் நாயகம் ஸல் அவர்களது சுன்னத்தில் வழிமுறை ஏவலில் உள்ளது தான்.

Monday, 16 November 2015

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை போன்ற மனிதரல்ல.




قل انما انا بشر مثلكم يوحى الى انما الهكم اله واحد فمن كان يرجوا لقاء ربه فليعمل عملا صالحا ولايشرك بعبادة ربه  احدا

18:110. (நபியே!) நீர் சொல்வீராக: நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.