Saturday 21 November 2015

சுவனம் செல்ல ஸஹாபாக்களை பின்பற்றுவீர்.



நபிகள் நாயகம் ஸல் அவர்களது சுன்னத் பின்பற்ற தகுந்தது என்றால் ஸஹாபாக்களின் முன் மாதிரியை ஒப்புக்கொள்ளுதலும், அவர்கள் நடந்து காட்டிய வழியில் செல்வதும், நபிகள் நாயகம் ஸல் அவர்களது சுன்னத்தில் வழிமுறை ஏவலில் உள்ளது தான்.



நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
உங்களில் யாராவது என் காலத்திற்கு பின் வாழ்ந்திருந்தால் மார்க்கத்தில் ஏராளமான அபிப்பிராய வேற்றுமைகளை பார்க்க வேண்டியது ஏற்படும். அந்த நேரத்தில் என்னுடைய சுன்னத்தையும் குலபாயே ராஷிதீன்களுடைய சுன்னத்தையும் பலமாக பற்றிப் பிடியுங்கள்.
                     நூல். திர்மிதி, அஹ்மது, மிஷ்காத், இப்னு மாஜா.


இங்கு என்னுடைய சுன்னத் என்று மட்டும் கூறாமல், குலபாயே ராஷிதீன்களுடைய சுன்னத்தையும் சேர்த்துக் கூறியிருப்பது மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய விசயமாகும்.


மேலும் நபி ஸல் அவர்கள் சொல்கிறார்கள்.

"أصحابي كالنجـــوم بأيهم اقتديتم اهتديتم"

என்னுடைய தோழர்கள் நட்சத்திரங்களுக்கு சமமானவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின் தொடர்ந்தாலும் நேர்வழியைப் பெற்று விட்டீர்கள்.

                                           நூல். மிஷ்காத்.


எனவே ஸஹாபாக்களை ஒதுக்கி விட்டு சொல்பவர்களுக்கு ஒரு போதும் நேர்வழி கிடைப்பது சாத்தியமாகாது. இது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த கொள்கையில் உறுதியாக இருப்பதே சுன்னத் ஜமாத்தின் குறிகோளாகும்.


ஸஹாபாக்களை பற்றிய கொள்கை விளக்கம்.

பிரபல ஹதீஸ் கலை வல்லுனர் ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் தனது இஸாபா என்னும் நூலின் முன்னுரையில் ( பிரிவு 3, பக்கம் 6 ல் ) சுன்னத் ஜமாத்தினரின் கொள்கையில் ஸஹாபாக்களின் அந்தஸ்து பற்றி விளக்கம் தந்துள்ளார்கள். அதன் சுருக்கம்.

 "எல்லா ஸஹாபாக்களும் நேர்மையானவர்கலாகும்இது சுன்னத் ஜமாத்தின் ஒன்றுபட்ட கருத்தாகும். இதில் பித்அத்வாதிகள் சிலரை தவிரவேறு யாரும் மாறுபடவில்லை. "


பிரசித்தப் பெற்ற ஹதீஸ் ஆய்வாளர் அல்கதீபு அபுபக்கர் அல் பஃதாதி ரஹ் அவர்கள் தனது நூலான கிபாயாவில் இது விசயமாக கூறும் போது.
" ஸஹாபாக்களின் நேர்மை நிரூபணமனதாகும். அல்லாஹ் அவர்களை தூய்மையானவர்களாகவும் நீதிமான்களாகவும் தனது மறையில் அறிவித்துதனக்கு உகந்த நல்லடியார்களாகஅவர்களை தேர்வு செய்திருப்பதின் மூலம் இதை நம்மால் அறிய முடிகிறது.


 ஸஹாபாக்களின் தூய நிலை பற்றி கூறும் திருக்குர்ஆனின் வசனங்கள்.

وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏

 9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.


لَـقَدْ رَضِىَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِيْنَ اِذْ يُبَايِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِىْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِيْنَةَ عَلَيْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِيْبًا ۙ‏ 
 
 48:18. முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.


  لِلْفُقَرَآءِ الْمُهٰجِرِيْنَ الَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاَمْوَالِهِمْ يَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّيَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ‌ۚ‏ 

59:8. எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.


وَاعْلَمُوْۤا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِ‌ؕ لَوْ يُطِيْعُكُمْ فِىْ كَثِيْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَ لٰـكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَيْكُمُ الْاِيْمَانَ وَزَيَّنَهٗ فِىْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الرّٰشِدُوْنَۙ‏ 

49:7. அறிந்துகொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.


குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் அனைத்தும் அவர்களின் யோக்கியாம்ஸத்தை உறுதி செய்திருக்கின்றன. அல்லாஹ்வே அவர்களின் நேர்மைக்கு சான்று வழங்கி இருக்கும் போது, படைப்புகளின் வேறு எவரின் சாட்சியமும் தேவையில்லை. ஒருவேளை அல்லாஹ்வும் ரசூலும் இவர்களின் நேர்மை பற்றி எதுவும் சொல்லாமலிருந்தாலும் கூட இது அவசியப்பட்டிருக்காது. காரணம் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்திருக்கிற அளப்பரிய சேவை, சொந்த நாட்டை துறந்து, தங்கள் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் தியாகம் செய்த அர்பண வாழ்வு, சமய விரோதியாக இருப்பது தந்தையானாலும், தனயனானாலும் கொஞ்சமும் தயங்காமல் அவர்களை எதிர்த்து போராடி வெட்டி வீழ்த்திய உளப்பூர்வமான மெய் விசுவாசம். சுயநலமில்லா பொது நலம், உள்ளத்தில் ஆழமாக வேறூன்றிய திட ஈமான். ஆகிய இந்த வரலாற்று உண்மைகளே அவர்களது ஒழுக்கத்தையும், தூய்மையையும், நேர்மையையும், பறைசாற்ற போதுமானவையாகும்.


ஹதீஸ் கலை பேரறிஞர் அபூமுஹம்மத் இப்னு அல் அஸ்மு அவர்கள் கூறுகிறார்கள்.
ஸஹாபாக்கள் அனைவரும் சுவர்க்கவாசிகளாவர். இதில் கருத்து வேறுபாடில்லை.


அதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் வசனங்கள்.

21:101   اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰٓىۙ اُولٰٓٮِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَۙ‏ 
21:101. நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.


وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏
 9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.


படைப்பிங்களில் நபிமார்களுக்கு அடுத்து சிறந்த அந்தஸ்தை பெற்றவர்கள் ஸஹாபாக்களே ஆகும். இதை பஸ்ஸாஸ் அவர்கள் தனது முஸன்னதில் நம்பகமான அறிவிப்பாளர் தொடருடன் ஜாபிர் வழியாக ஸயீது ப்னு முஸய்யிபை அறிவிப்பாளாரக கொண்டு ரிவாயத் செய்கிற ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.


திட்டமாக அல்லாஹு தாலா என்னுடைய ஸஹாபாக்களை நபிமார்களை முர்ஸிலீன்களை தவிர்த்துண்டான மற்ற ஜின் இனத்தவர் அனைவரிலும் சிறந்தவர்களாகத் தேர்வு செய்திருக்கிறான்.


இது நாம் கூறியது தான் முஸ்லிம் அறிஞர்களின் ஸஹாபாக்கள் பற்றிய கொள்கை கோட்பாடுகளாகும். பின்னர் இமாம் கதீபு அவர்கள் அபு சுர்ஆ ராஸி சொன்ன ஒர் செய்தியை அதற்கான ஆதாரத்துடன் அறிவிக்கிறார்கள்.

நீ ரஸுலுல்லாஹ்வுடைய ஸஹாபாக்களில் யாரையேனும் குறைகாணும் மனிதரை கண்டால் அவன் ஒரு ஸின்தீக் இறை மறுப்பை மறைத்து இறை நம்பிக்கையை வெளிப்படுத்துபவன். என்று விளங்கிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுடைய ரஸுல் உண்மையானவர் குர்ஆன் உண்மையானது. ரசூல் கொண்டு வந்த ஷரீஅத் உண்மையானது. இந்த ஷரீஅத் முழுவதையும் நம்வரை வந்து சேர்த்தவர்கள் ஸஹாபாக்கள். அவர்களின் மீது குறை கூறி அந்த உத்தமர்களின் தூய்மையையே களங்கப்படுத்துபவர் நமக்கும் ஷரீஅத்திற்கும் இடையேயான பாலத்தையே தகர்த்தெறிபவராவார். இது குர்ஆன் மற்றும் சுன்னத்தை அழிப்பதற்கு சமமாகும். இத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் ஸனாதிகா வேடதாரிகள் என்பதில் சந்தேகமில்லை.


தராவிஹ் தொழுகையில் உமரிப்னுல் கத்தாப் ரலி BLACK MARKET கருப்பு மார்கெட் நடத்தினார்கள். உஸ்மான் ரலி அவர்கள் ஜும்ஆ பாங்கில் கைவரிசையை காட்டினார்கள். அபூஹுரைரா ரலி அவர்கள் தம்கையிலிருந்து ஹதீஸ்களை போட்டார்கள். என்றெல்லாம் வாய்கூசாமல் கூறி ஸஹாபாக்களை குறை கூறுவோர் முஸ்லிமாக இருக்க முடியாது. இப்படி ஸஹாபாக்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பவர்களை ரசூலுல்லாஹி ஸல் அவர்கள் கடுமையாக கண்டனம் செய்துள்ளார்கள்.


وروى عبد اللَّه بن مغفَّلٍ قال: قال رسول اللَّه صَلَّى الله عليه وسلم: "اللَّه اللَّه في أصحابي، اللَّه اللَّه في أصحابي، لا تتَّخذوهم غرضًا بعدي، فمن أحبَّهم فبحبَّي أحبَّهم، ومن أبغضهم فببغضي أبغضهم، ومن آذاهم فقد آذاني، ومن آذاني فقد آذى اللَّه، ومن آذى اللَّه يوشك أن يأخذه"

என்னுடைய ஸஹாபாக்கள் விசயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். எனக்கு பின்னால் உங்களுடைய தாக்குதலுக்கு இலக்காக அவர்களை ஆக்கிக் கொள்ளாதீர்கள். எனவே யார் அவர்களை நேசித்தார்களோ அவன் என் மீதுள்ள நேசத்தின் காரணமாகவே அவர்களை நேசித்திருப்பார்கள். யார் அவர்களை வெறுத்தார்களோ அவர்கள் என் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவே வெறுத்திருப்பார்கள். அவர்களை வேதனை படுத்தியவர்கள்அல்லாஹ்வை வேதனை படுத்தியவர்களாவார்கள். அல்லாஹ்வை வேதனை படுத்தினால் அல்லாஹ் அவரை வெகு சீக்கிரமே பிடித்து வேதனை செய்வான்.
       அறிவிப்பவர் அப்துல்லாஹ் ப்னு முகப்பல் ரலி. நூல் திர்மிதி


ஸஹாபாக்களை தாக்குவது ரசூலுல்லாஹ் ஸல் அவர்களையே ஏன் அல்லாஹ்வையே தாக்குவது போன்றாகும். என்ற இந்த ஹதீஸ் ஆய்துரைக்கத்தக்கது.


 وعن أبي هريرة رضي الله عنه قال: قالَ رسولُ اللهِ صلى الله عليه وسلم لا تَسُبُّوا أَصحابي، فو الذي نفسي بيده لو أَنَّ أَحدكم أَنفق مثل أُحُدٍ ذهباً ما أدرك مدَّ أحدهم ولا نصيفه)

என்னுடைய ஸஹாபாக்களை திட்டாதீர்கள். ஏனெனில் திட்டமாக உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை இறைவழியில் செலவு செய்தாலும் அவர்களில் ஸஹாபாக்களில் ஒருவர் ஒரு உள்ளங்கை அல்லது அதன் பாதியளவு செய்த தர்மத்திற்கு ஈடாகாது.
                                             நூல். புகாரி, முஸ்லிம், மிஷ்காத்,


" எனது ஸஹாபாக்களை ஏசுபவனை நீங்கள் கண்டால் அவனை பார்த்து உங்களில் கெட்டவர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக என்று சொல்லுங்கள். "


        ஷைகுல் ஹதீஸ் H. கமாலுத்தீன் ஹழரத் அவர்கள்.
      அல்பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி. வேலூர்.

No comments:

Post a Comment