Tuesday 24 November 2015

முழுமை பெற்ற தீன் பிக்ஹு ஆய்வு சட்டங்களையும் உள்ளடக்கியதே..

முழுமை பெற்ற தீன் குர்ஆன் ஹதீஸ் மட்டுமல்ல.... அதன் பிக்ஹு ஆய்வு சட்டங்களையும் உள்ளடக்கியதே..
-          ஷைகுல் ஹதீஸ் H. கமாலுத்தீன் ஹளரத் அவர்கள்.
(அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத்வேலூர்.)



حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

5:3 (தானாகச்) செத்ததுஇரத்தம்பன்றியின் இறைச்சிஅல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும்கழுத்து நெறித்துச் செத்ததும்அடிபட்டுச் செத்ததும்கீழே விழுந்து செத்ததும்கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடிபுலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்துமுறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்எனக்கே அஞ்சி நடப்பீர்களாகஇன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றிபசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும்கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.

இந்த வசனம் ஹிஜ்ரி 10 வது வருடம் நபி (ஸல்) அவர்களுடைய கடைசி ஹஜ்ஜின் போது அரபா மைதானத்தில் இறங்கியது. மக்காவின் வெற்றிக்கு பின் அரபு நாடு முழுமையாக இஸ்லாத்தை தழுவ ஆரம்பித்தது.

இந்த வசநம் வந்த நாள் அரபாவுடைய நாள். இந்த நாளை பற்றி தலைமையான நாள் என்று நபி (ஸல்) புகழ்ந்து கூறியுள்ளார்கள். அன்றய நாள் ஜும்ஆவுடைய நாள், அதே நாளைப் பற்றி ஏழைகளின் பெருநாள் என்றும், வசதியற்றோருக்கு ஹஜ்ஜுடைய நாள் என்றும் நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

அரபா மைதானத்தின் ஒரு பகுதியில்அருள் மலை இருக்கிறது. இந்த மைதானத்தில் மாலை அஸர் நேரத்தில் இவ்வசனம் இறங்கியது. மாலை நேரமே பிரார்த்தனைக்கு மிக பொருத்தமான நேரம். ஜும்ஆவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் ஒன்று உண்டு. அது அன்றய மாலை நேரம் என்று கூட கூறப்படுகிறது. அரபா தினமே துஆ ஏற்றுக் கொள்வதற்கு விசேசமான நாள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஹத்திக்காக 1.50 லட்சம் மக்கள் ஒன்று கூடிய இடம்.

ஹஜ்ஜி நிறைவேற்றுவதற்குரிய கடமைகளில் இந்த மைதானத்தில் தங்குவது மிக முக்கியமான ஒன்று.
قال رسول الله صلى الله عليه وسلم : " الحج عرفة "
ஹஜ்ஜி என்றாலே அரபா தான் என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்தளவுக்கு விசேசமான இடத்தில், காலத்தில் இந்த வசனம் இறங்கியது.

இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சமயம் யூத அறிஞர்களின் குழு வந்தது. அவர்களில் ஒருவர் உங்களுக்கு ஒரு வசனம் வந்துள்ளது. அது போன்ற ஒரு வசனம் எங்களுக்கு வந்திருந்தால் அந்த நாளை நாங்கள் பெருநாளாக கொண்டாடுவோம் என்று கூறினார். அதற்கு கலீபா அவர்கள் அது எந்த வசனம் என்று கேட்டார். யூதர் இந்த வசனத்தை குறிப்பிட்டார். அதற்கு கலீபா அவ்ரகள் நாங்கள் அந்த நாளை இரண்டு பெருநாளாக கொண்டாடுகிறோம். ஒன்று ஜும்ஆவுடைய நாள். து ஒவ்வொரு வாரமும் பெருநாள். மற்றொன்று  அரபா நாள் அதை வருடத்திற்கு ஒரு பெருநாளாக கொண்டாடுகிறோம்.

ஆக நாங்கள் அதை இரு பெருநாளாக ஆக்கத் தேவையில்லை. அது இறங்கியதே இரு பெருநாள் தினத்தில் தான் என்று பதிலளித்தார்கள். உங்கள் மார்க்கத்தை இன்றய தினம் நிறைவாக ஆக்கி விட்டேன்.

இந்த வசனம் வந்ததை பற்றி ஏன் சந்தோசப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

மார்க்கம் முழுமையாக ஆகிவிட்டது எனவே புதிய சட்டங்கள் இனி வராது. இதற்கு முன் வந்த சட்டங்களே போதும். அதன்படி சரியாக செயல் ஆற்றினாலே மார்க்கப்படி நடந்தவனாக ஆகிவிடுவான். இந்த வசநத்தை கேள்விப்பட்ட உடனேயே மனிதன் சந்தோசமடைவது நிச்சயம்.

இதற்கு முன் வந்த சட்டத்தைக் கொண்டு செயலாற்றி பழக்கப்பட்டு விட்டனர். அதில் கடினமான சட்டம் எதுவும் இல்லை. இனிமேல் சட்டம் வந்து கொண்டிருக்கும் என்று எண்ணும் போது எப்படிப்பட்ட சட்டம் வருமோ அது எவ்வளவு கடினமாக இருக்குமோ என்ற பயம் வந்து விடும். இப்பொழுது அந்த பயமில்லை. இது தான் சட்டம் என்ற நிம்மதி ஏற்ப்பட்டு விடுகிறது. இது சந்தோசத்திற்கு காரணம்.

குர்ஆனில் கூறப்பட்ட இந்த சட்டங்கள் போதுமா...போதும் அப்படியானால் ஹதீஸ் சட்டங்கள் வேண்டாமா என்ற கேள்வி வராதா..என்றால் வராது. ஏனெனில் குர்ஆனை ஆராயும் போது ஹதீஸ் சட்டங்களும் உண்மையில் குர்ஆன் சட்டங்களே என்பது புரியவரும். குர்ஆனை பின்பற்ற வேண்டும் என்றால் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள இரசூலுக்கு வழிப்படுங்கள் போன்ற வசனங்களையும் பின்பற்ற என்பது தானே முறை அவ்வாறே ரசூல் -
 وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
நபி எதை உங்களுக்கு கொடுத்தாரோ அதை எடுத்து நடந்து கொள்ளுங்கள். எதை விட்டும் தடுத்தாரோ அதை விட்டும் விலகி கொள்ளுங்கள்.                                                   
                             அல்குர்ஆன்.  59 - 7.
كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ
2:151இதே போன்றுநாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரைநம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்உங்களுக்கு வேதத்தையும்ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றைஉங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.

இதல்லாமல் நபியுடைய போதனை குர்ஆனுக்கு விளக்கம். குர்ஆன் சொல் வடிவம் என்றால் ஹதீஸ் அதன் செயல் வடிவம். நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் சொல் செயல் அங்கீகாரத்தால் குர்ஆனுக்கு விளக்கமளித்துள்ளார்கள். இந்த வகையில் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நடமாடும் குர்ஆன் என்றால் அது மிகையாகாது. எனவே நபி (ஸல்) அவர்களின் போதனைகள் எடுத்து நடப்பது அவசியம்.

குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் போதனையும் சேர்ந்து தான் தீன் - இஸ்லாமிய மார்க்கம். இந்த மார்க்கத்தை பூர்த்தியாக்கி விட்டேன் என்று அல்லாஹ் சொன்னால் அது குர்ஆனை மட்டுமல்ல ஹதீஸையும் சேர்த்து தான் இஸ்லாத்திற்கு பூர்த்தி என்பதை நாம் விளங்க வேண்டும். ஹதீஸை ஒதுக்கி விட்டு குர்ஆனை விளங்க முடியாது. அதற்கு திருக்குர்ஆனின் பல வசனங்கள் எடுத்துக்காட்டாக கூற முடியும்.

الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُم بِظُلْمٍ أُولَٰئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُم مُّهْتَدُونَ
6:82எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோஅவர்களுக்கே அபயமுண்டுஇன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

இந்த வசனம் இறங்கிய போது நபித்தோழர்கள் யாரசூலல்லாஹ் எங்களில் யார் எந்த வகையான அநீதமும் செய்யாதவர்கள்...?    அப்படியானால் எங்களில் யாருக்கும் ஹிதாயத்தும் அபயமும் கிடைக்காதா..என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது நீங்கள் நினைத்தது போன்று அல்ல. அது லுக்மான் அலை தனது மகனுக்கு கூறியதைப் போன்று "எனது அன்பு மகனே அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. இணை வைப்பது பெரும் அநீதி.என்ற ஆயத்தை ஓதிக்காண்பித்தார்கள்.
                                     நூல் புகாரி முஸ்லிம்.

وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ۖ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
31:13இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதேநிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).

இந்த வசனத்தில் ழுல்மு என்ற வார்த்தைக்கு எந்த வகையான தீய செயலும் செய்யக்கூடாது என்று நபித்தோழர்கள் விளங்கினர். ஆனால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைக்கு இணை வைப்பது என்றால் பெரும் அநீதி என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கூறினார்கள்.

மற்றொரு எடுத்துக்காட்டு.
عن أبي هريرة قال : خطبَنا رسول الله صلى الله عليه وسلم فقال : " أيها الناس إن الله عز وجل قد فرض عليكم الحج فحجوا ، فقال رجل : أكلَّ عام يا رسول الله فسكت حتى قالها ثلاثاً،  فقال رسول الله صلى الله عليه وسلم : لو قلتُ نعم لوجبت ولما استطعتم ، ثم قال : ذروني ما تركتكم فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوه " . رواه مسلم ( 1337 ) .
ஹஜ்ஜு செய்வது சக்தி பெற்றவர்கள் மீது கடமை என்ற வசனம் வந்த போது நபி (ஸல்) அவர்கள் மக்களே.... உங்களுக்கு ஹஜ்ஜு கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகையால் நீங்கள் ஹஜ்ஜு செய்யுங்கள். என்று பிரசங்கம் செய்தார்கள். அதில் ஒருவர் யாரசூலல்லாஹ் ஒவ்வொரு வருடமுமா...என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் வாய் மூடி அமைதியாக இருந்தார்கள். அவர் திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் அதே கேள்வியை மூன்று முறை கேட்டார். நபி (ஸல்) அவர்கள் நான் ஆம் என்று பதில் கூறினால் கடமையாகி விடும் என்றார்கள்......
         நூல் .முஸ்லிம் அறிவிப்பாளர். அபூஹுரைரா (ரலி).

மற்றொரு அறிவிப்பில் அக்ரஃ ப்னு ஹாபிஸ் (ரலி) அவர்கள் யாரசூலல்லாஹ் ஹஜ் ஒவ்வொரு வருடமுமா...அல்லது ஒரு முறையா என்று கேட்டார். நபியவர்கள் ஒரு முறை தான் கூறினார்கள். அதற்கு மேல் நபில் ஹஜ்ஜாகும் என்று பதில் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் நான் ஆம் என்று கூறினால் ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜு கடமையாகி விடும். அதாவது அந்த அதிகாரம் அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்துள்ளான். நான் உங்களால் செயலாற்ற முடியாது என்பதை யோசித்து ஆயுளில் ஒரு முறை தான் கடமை என்று கூறியுள்ளேன். இவ்வாறு நாம் குர்ஆனிலுள்ள பல இடங்களில் விளக்கம் தேவையுள்ள இடங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்களுடைய விளக்கமும் சேர்த்து தான் குர்ஆன் சட்டங்கள் தீனி முழுமை பெறுகிறது என்பதை விளங்கலாம்.

அது மட்டுமல்ல குர்ஆனுடைய வசன அமைப்பை உற்று நோக்கினால் அதிலிருந்து பல பொது சட்டங்கள் விளங்கும் முறையில் தான் பல வாக்கியங்கள் அமைந்துள்ளன. அதிலிருந்து எடுக்கப்பட்ட சட்டங்களும் தீன் மார்க்கம் தான். கருத்து நிறைந்த சுருக்கமான வார்த்தைகளை சொல்லும் திறமை எனக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான். எனஅறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதன்படி நபி (ஸல்) அவர்களுடைய வாக்கியத்திலிருந்து பல நூறு சட்டங்களை இமாம்கள் எடுத்துள்ளார்கள். இவைகள் அனைத்தும் தீன் மார்க்கம் தான். இவைகள் அனைத்தையும் சேர்த்து தான் மார்க்கம் பூரணமடைந்துள்ளது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

                   எடுத்துக்காட்டு.1
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ ۖ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
2:173தானாகவே செத்ததும்இரத்தமும்பன்றியின் மாமிசமும்அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லைநிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும்மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.

அல்லாஹ் இதற்கு முன் தடைசெய்யப்பட்ட உணவுகளைப் பற்றி கூறி அதை சாப்பிடுவது கூடாது எனினும் நிர்பந்ததிற்காக சாப்பிடலாம் என்று கூறியுள்ளான்.

ஆகவே ஒருவனுக்கு உண்ண ஆகாரமில்லை. செத்த பிராணிதான் உண்டு என்றால் அதை உயிர் வாழ  தேவையான அளவு சாப்பிடலாம். அதே போன்று தான் பன்றி இறைச்சியும். ஒரு வனுக்கு வாயில் வைத்த உணவு விழுங்க முடியாமல் விக்குகிறது. தண்ணீரும் பக்கத்தில் இல்லை. ஆனால் மது மட்டும் தான் இருக்கிறது என்றால் அதை குடித்து ஆகாரத்தை உள்ளே செலுத்தலாம் என்று இமாம்கள் இதன் உட்பிரிவு சட்டத்தை விவரிப்பார்கள். இப்படி நிர்பந்தம் ஏற்படுகிறபோது ஹராமை சாப்பிடலாம். ஆனால் உயிர் வாழ தேவையான அளவு தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு மிஞ்சி சாப்பிடக்கூடாது. ஆசையோடு பிரியத்துடன் சாப்பிடக்கூடாது என்று அல்லாஹ் மேற்படி வசனத்தில் கூறியுள்ளான்.

இதிலிருந்து நிர்பந்தம் தடை செய்யப்பட்டதை ஆகுமாக்கும். அவற்றை தேவையான அளவுக்குத்தான் உபயோகிக்க வேண்டும் என்ற பொது சட்டத்தை நமது இமாம்கள் குர்ஆனிலிருந்து தான் எடுத்துள்ளனர். எனவே இஸ்லாமிய மார்க்கம் சம்பூர்ணமாகி விட்டது என்று அல்லாஹ் கூறினால் அதில் குர்ஆன் வழி வந்த ஆய்வு சட்டங்களும் ஹதீஸ் வழி அமைந்த சட்டங்களும் உள்ளடங்கும்.

                   எடுத்துக்காட்டு.2
وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ الرَّضَاعَةَ ۚ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ ۚ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَّهُ بِوَلَدِهِ ۚ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ ۗ فَإِنْ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗ وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّا آتَيْتُم بِالْمَعْرُوفِ ۗ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ (233)
2:233(தலாக் சொல்லப்பட்ட மனைவியர்தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால்தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும்உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கிஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால்அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாதுதவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லைஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ ۚ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ ۚ وَلَا يَأْبَ كَاتِبٌ أَن يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ ۚ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا ۚ فَإِن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ ۚ وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ مِن رِّجَالِكُمْ ۖ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاءِ أَن تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الْأُخْرَىٰ ۚ وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا ۚ وَلَا تَسْأَمُوا أَن تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَىٰ أَجَلِهِ ۚ ذَٰلِكُمْ أَقْسَطُ عِندَ اللَّهِ وَأَقْوَمُ لِلشَّهَادَةِ وَأَدْنَىٰ أَلَّا تَرْتَابُوا ۖ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا ۗ وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ ۚ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ ۚ وَإِن تَفْعَلُوا فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ ۗ وَاتَّقُوا اللَّهَ ۖ وَيُعَلِّمُكُمُ اللَّهُ ۗ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (282)
2:282ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால்அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்மேலும்அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாதுஇன்னும்யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோஅல்லது (பால்யம்முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோஅல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால்சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும்பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால்இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாதுதவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோபெரிதோ அதைஅதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும்சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும்இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின்அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லைஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோசாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோவேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.

இவ்விரு வசனஙகளில் ஒருவருக்காக மற்றவர்களை துன்புறுத்தக்கூடாது என்பதை விளங்குகிறோம்.

நபி (ஸல்) அவர்கள்  " ஆரம்பமாக ஒருவருக்கு இடர் அளிப்பதோ, பகரத்திற்கு இடர் அளிப்பதோ கூடாது " என்று கூறியுள்ளார்கள்.

இதனடிப்படையில் அமையும் சட்டம் யாருக்கும் இடரளிக்க கூடாது ஒருவரை துன்புறுத்தி மற்றவர்களுடைய துன்பத்தை துடைக்க கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளார்கள்.

இவைகளெல்லாம் சம்பூர்ண சன்மார்க்க சட்டங்கள் தாம்.

இடரை நீக்க வேண்டும் ஆனால் மற்றவருக்கு இடர் செய்து நீக்க கூடாது என்பதின் உட்பிரிவுகள்.

1. ஒரு மைக்கூட்டில் தங்க காசு விழுந்து விட்டது. அக்கூட்டை உடைத்து தான் காசை எடுக்க முடியும் என்றிருந்தால் காசுக்காரன் கூட்டை உடைத்து காசை எடுத்துக்கொள்வான். மைக்கூட்டுக்குரிய கிரயம் கொடுத்து விட வேண்டும்.

2. இரு மாடுகள் மலையின் உச்சியில் ஏறிவிட்டன. ஒன்றை கீழே தள்ளி விட்டால் தான் மற்றொன்றை காப்பாற்ற முடியும். இந்த நிலையில் எவன் தனது மாட்டை காப்பாற்ற நினைக்கிறானோ அவன் அந்த மாட்டை கீழே தள்ளி விட்டு தன் மாட்டை காப்பாற்றலாம். தள்ளி விட்ட மாட்டிற்கு நஷ்டத்தை கொடுப்பான்.

இதோ போன்று குர்ஆன் ஹதீஸிலிருந்து பல பொது சட்டங்களை எடுத்து அதன் அடிப்படையில் நமது இமாம்கள் சட்டம் கூறியுள்ளனர்.

சுருக்கமாக கூறினால் குர்ஆன் ஹதீஸ் ஓர் கட்டிட வரைபடம் ( MAP ) போன்றது. அதிலேயே தேவையான எல்லா அறைகளும் அவைகள் எந்த மாதிரி அமையும் என்ற எல்லா புள்ளி விபரங்களும் இருக்கவே செய்கிறது. ஆனால் சராசரி மக்களுக்கு அது புரிவதில்லை. என்ஜினியரிடம் விசாரித்தால் அதில் எல்லாம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார். அது போல குர்ஆன் ஹதீஸ்களில் ஒளிந்து கிடக்கும் எல்லா சட்டஙகளையும் மார்க்க சட்டக்கலை வல்லுனர்களான இமாம் முஜ்தஹிதீன்கள் நமக்கு விளக்கி வைத்து உள்ளார்கள்.

அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் உண்மையை விளங்க வைப்பானாக. ஆமீன்.

No comments:

Post a Comment