Thursday 26 November 2015

வரலாற்று வினோதம்

           
லி ப்னு யஹ்யா கூறுகிறார்.:  
அப்பாசிய குடும்பத்தை சேர்ந்த கலீபா முன்தஸிர் பில்லா ஒருமுறை ஒரு கூட்டத்தை கூட்டடினார். அதில் தங்க இலையோடிய விலை உயர்வான பட்டு விரிப்பு விரிக்கச் சொன்னார். விரிப்புகள் விரிக்கப்பட்டது. அதில் ஒரி விரிப்புக்கு மத்தியில் ஒரு பெரிய வட்டம் இருந்தது. அதில் ஒரு அரசருடைய படம் பொறிக்கப்பட்டிருந்தது, அவருடைய தலையில் கரீடம் சூட்டப்பட்டு இருந்தது. இந்த வட்டததை சுற்றி பார்சி மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.
கூட்டம் கூடியதும் கலீபா முன்தஸிர் பில்லா அக்கூட்டத்தில் வந்து அமர்ந்தார்.

அதில் ஆஜராக வேண்டிய அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். அப்போது அந்த வட்டத்தை பார்த்து முன்தஸிர் எழுந்தார். ஒரு சர்தாரிடம் கேட்டார் இதில் என்ன எழுதப்பட்டுள்ளது. அந்த சர்தாரால் அதை படிக்க முடியவில்லை. பின்னர் தர்பாரில் கூடியிருந்த அனைவரிடமும் இதே கேள்வி கேட்டார். ஆனால் யாராலும் அதை சரியாக படிக்க முடியவில்லை.

உடனே ஒரு அடிமைக்கு உத்தரவிட்டார். பார்சி மொழி தெரிந்த யாரையாவது ஒரு ஆளை அழைத்து வா என்று.  கொஞ்ச நேரத்தில் ஒரு மனிதர் வந்து அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
முன்தஸிர் கேட்டார்.  " என்ன எழுதி இருக்கிறதுஎன்று "ஈரானியர்களின் மடத்தனம் அவ்வளவு தான் வேறு ஒன்றுமில்லை" அமீருல் முஃமினீன் என அவர் சமாளித்தார்.
"எனக்கு சொல் அதில் என்ன எழுதியிருக்கிறது "  முன்தஸிர் ஆணையிட்டார்.
அமீருல் முஃமினீன்  " இதற்கு பொருள் ஒன்றுமில்லை. " என்று அவர் மீண்டும் மழுப்பினார்.
முன்தஸிருக்கு கோபம் கொப்பளிக்க " இந்த வசனத்தின் மொழிப்பெயர்ப்பை சீக்கிரம் சொல் " என அவர் கர்ஜித்தார்.
இப்போது அவர் சொன்னார் . " இதில் எழுதப்பட்டுள்ளது, நான் கிஸ்ராபின் ஹுர்முஸ் உடைய மகன் ஷேர்வா - வாகும். நான் எனது தந்தையை கொலை செய்தேன். அதன் பின் ஆறு மாதத்தை விட அதிகமாக எனது ஆட்சி நிலைபெறவில்லை..."
முன்தஸிர் முகம் வாடியது. அவர் உடனே தர்பாரை விட்டு எழுந்து அந்தபுரத்திற்கு சென்று விட்டார். அவருடைய ஆட்சியும் ஆறு மாதத்தைவிட அதிகமாக நிலை பெறவில்லை.
 (தாரிக் லில் கதீப் 120 - 121/2)
             
            தொகுத்தவர்.

S. முஹம்மது அமீர் மஸ்லஹி, தூத்துக்குடி.

No comments:

Post a Comment