Thursday 20 January 2022

கல்வி அறிக்கை

மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி பொதுவாக கல்வியில்

நிறைவான வளர்ச்சியை கண்டு வருகிறது.

பாடத்திட்டம்:


அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை வழிபட்ட நமது கல்லூரியில் மத்ஹபுகளின் அடிப்படையில் ஸில்ஸிலேயே நிஜாமிய்யாவின் பாடத்திட்டத்தின்படி பாடங்கள் நடைபெற்று வருகிறது. 


பரீட்சைகள்:


பொதுவாக கல்லூரியில் சிறிய அளவில் நான்கு மாதப் பரீட்சைகளும், பெரிய அளவில்' இரண்டு பொதுப் பரீட்சைகளும் நடத்தப்பட்டன. இப்பரீடசை மாணவர்களின் திறமைகளை தகுதிகளை வெளிப் படுத்தியதுடன் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தன என்பதில் ஐயமில்லை.


அல்மனார்:


மாணவர்களின் எழுத்தாற்றல் வளர்ச்சிக்காக அல்மனார் கையெழுத்துப் பிரதி 1989-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பத்திரிக்கை இது வரை 58 இதழ்கள் வெளியானதில் மாணவர்களின் எழுத்தாற்றலும், எழுத்தின் மீதுள்ள ஆர்வமும் வளர்ந்துள்ளது.


சொற்பயிற்சி:


மாணவர்களின் பேசும் திறமையை வளர்ப்பதற்கு ஒவ்வொரு வியாழன் மாலையிலும் சொற்பொழிவுகள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நன்கு பழகிய மாணவர்களுக்கு சொல்லாற்றல். ஏற்பட்டிருக்கிறது. வெளியூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு நல்ல முறையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.


ஆசிரியர் சேவை:


நமது சுல்லூரி ஆசிரியர்கள் பகல்நேரத்தில் முறையாக பாடங்கள் நடத்துவதுடன் மஃக்ரிபு முதல் இரவு 10.30 மணி வரை தினம் ஒருவர் என்ற விதத்தில் மாணவர்கள் இரவு பாடம் பார்ப்பதை கண்காணித்தும் வருகின்றனர். எல்லாம் வல்ல அல்லாஹ் தமக்கு ஈருலக பாக்கியங்களையும் தந்தருள்வானாக!


கல்லூரியில் தினமும் நடந்து வரும். சிறப்பு அமல்கள்: 


நமது கல்லூரியில் தினமும் பஜ்ருக்கு பின்

திலாவத் மஜ்லிஸ் நடைபெறும்.


ஒவ்வொரு நாளும் மஃக்ரிபு தொழுகைக்குப்  பின்பு

ஸலவாத்து மற்றும் துஆவோடு வாகிஆ சூராவும் ஓதப்பட்டு வருகிறது. 


தினமும் இஷாவுக்குப் பின்பு

ஹத்தாது ராத்தியும் நடைபெறுகிறது


வாரத்திற்கு ஒரு முறை வியாழன் மாலை வெள்ளி இரவு மஃரிபுக்குப்பின் புர்தா மஜ்லிஸும் நடைபெறுகிறது.


மாணவர்கள் தினமும் கல்லூரிக்கு உதவிகள் செய்து வருகின்ற நன்மக்களின் இருலோக நல்வாழ்விற்கு உளமாற துஆ செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment