Tuesday 25 January 2022

நபியே நீங்கள் படைக்கப்பட்டீர்கள் எப்படி விரும்புகிறீர்களோ அப்படி !


நபியின் ஆஸ்த்தான கவிஞர்
ஹஸ்ஸான் பின் தாபித் (ரலியல்லாஹு அன்ஹு)
அவர்கள் 
நபிகளாரின் அவையில் பாடிய கவிதை

உங்கள் கண்களை விட கருமையான 
அழகான கண்கள் இல்லை !

எந்தத் தாயும் தங்களைவிட அழகான
குழந்தையைப் பெற்றதில்லை!

நீங்கள் குறையில்லாமல் படைக்கப்பட்டீர்கள்
நீங்கள் எப்படி படைக்கப்பட விரும்புவீர்களோ அப்படி !

உங்கள் புகழ் இவ்வுலகில் பரவுகிறது
கஸ்தூரியை விட அதிக மனத்தோடு !

உங்கள் அதிர்ஷ்டம் நிறைவானது!
தங்கள் கரம் பெரும் கடலை விட தாராளமானது !!
தங்கள் தர்மம் ஓடும் நதியைப் போன்றது !

தங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள்
இன்னும் பொறாமைத் தீவில் வெந்து கொண்டிருப்பவர்களிடமிருந்து
தங்களை இறைவன் பாதுகாக்க வேண்டும்.

எங்கள் எஜமானரே! 
உங்களுக்கு தகுமான அளவுக்கு புகழ்சேர்க்க என்னால் முடியவில்லை.
நான் சொல்லாற்றலில் ஏழை ! ஏழை எப்போதும் தோற்றுவிடுகிறான். 

என் கவிதைகள் முஹம்மதுக்கு பெரும் புகழ் சேர்க்கவில்லை...

முஹம்மதுதான் என் கவிதைகளுக்கு 
என்றும் புகழ் நிலைக்கச் செய்தது.
-----------------------
"எனது சார்பில் வசைபாடுபவர்களுக்கு பதில் சொல்லுங்கள், ரூஹுல் குத்ஸ் (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலம் அல்லாஹ் தங்களுக்கு உதவுவான்" என்று அருமை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வலைலம்) அவர்களால் வாழ்த்தப்பட்டவர் ஹஸ்ஸான் பின் தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) 

அறிவிப்பாளர்: அபூஹூரைரரா (ரலி) 
 நூல்: முஸ்லிம் 

No comments:

Post a Comment